அரக்கோணம்- நெமிலி சாலையில் தரைப்பாலம் சேதம்: 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழித்தடம் முடங்கும் நிலை

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம்- நெமிலி சாலையில் உள்ள தரைப்பாலம் உடையும் நிலையில் உள்ளதால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் பெய்த கனமழை காரணமாக அரக்கோணம்- நெமிலி சாலையில் உள்ள கல்லாறு தரைப்பாலம் சேதமடைந்தது. இதனையடுத்து அந்த பாலத்தை பொதுப்பணித்துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர். இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட தரைப்பாலத்தின் அடியில் சென்றுகொண்டிருப்பதால் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சேதமடைந்த பாலத்தில் சிலர் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.  எனவே தரைப்பாலத்தை முற்றிலும் சீரமைத்த பின்னரே அப்பாதையில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லாறு தரைப்பாலம் சேதமடைந்து இருப்பதால் அரக்கோணம்- நெமிலி வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் மாற்றுவழிப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கனரக வாகனங்கள் 25 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. கல்லாறு தரைப்பாலம் சேதமடைந்ததால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய வழித்தடமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.       …

Related posts

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளது: சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி

சிக்னல் கோளாறு: ரயில் பயணிகள் பாதிப்பு

மதுரையில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த 106 பயணிகள் வெளியேற்றம்: அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக கூறி மோசடி