அயோத்தி நில மோசடியில் மேயர், பாஜ எம்எல்ஏக்கள்; 40 பேர் பட்டியல் வெளியிட்டது ஆணையம்

அயோத்தி: அயோத்தியில் சட்டவிரோத நில விற்பனையில் நகர மேயர், முன்னாள், இந்நாள் பாஜ எம்எல்ஏ.க்கள் உள்பட 40 பேருக்கு தொடர்பு இருப்பதாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதையொட்டி, அங்கு நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி பாஜ பிரமுகர்கள் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்று பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத்தலைவர் விஷால் சிங், அயோத்தியில் மேயர், பாஜ எம்எல்ஏக்கள் உட்பட 40 பேர் மோசடி செய்ததாக நேற்று பட்டியல் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அயோத்தி நிலத்தை சட்டவிரோதமாக பிளாட், கட்டிடங்கள் கட்டி விற்றதில் நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய், எம்எல்ஏ. வேத் பிரகாஷ் குப்தா, மில்கிபூர் தொகுதி பாஜ முன்னாள் எம்எல்ஏ. கோரக்நாத் பாபா உள்பட 40 பேருக்கு தொடர்பு இருப்பதாக அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் விஷால் சிங் கூறி உள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், மாநில அரசின் நிர்வாக துறை, ‘அயோத்தி நில விவகாரம் பற்றிய பட்டியல்  குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதற்குள்ளாக இந்த பட்டியலை அவசரப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் இதில் ஈடுபட்டவர்கள்  மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது….

Related posts

அதானிக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் திருப்பம்: குஜராத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

போலி பயனர்களை களையெடுக்க எல்பிஜி வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் விளக்கம்

பலாத்கார முயற்சியை மரியம் ரஷீதா தடுத்ததால் தான் இஸ்ரோ ரகசியங்களை கடத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது: சிபிஐ குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள்