அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாபெரும் தூய்மை பணியில் 2 டன் குப்பைகள் அகற்றம்

நிலக்கோட்டை, ஆக. 13: அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க மாபெரும் விழிப்புணர்வு தூய்மை பணி நடைபெற்றது. செயல் அலுவலர் பூங்கொடிமுருகு தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

எ.புதூர், அம்மையநாயக்கனூர், இடையபட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளை தரம் பிரித்து அகற்றி வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்மூலம் சுமார் இரண்டு டன் குப்பை அகற்றப்பட்டது. இதில் துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் மற்றும் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்