அம்மாபேட்டையில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்

 

தஞ்சாவூர், ஜூலை 21: அம்மாபேட்டையில் அனைத்து தெருக்களிலும் நாய்கள் தொல்லை அதிகளவில் இருப்பதால் அவற்றை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெருவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் அனைத்து வார்டுகளிலும் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகிறது. அவை இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சைக்கிளில் செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவியரை நாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

ஒவ்வொரு தெருவிலும் குறைந்தபட்சமாக 10 நாய்களுக்கு மேல் உள்ளன. இவைகள் கும்பலாக குப்பைகள் கிளறும்போது சண்டையிண்டு கொண்டு சாலையில் செல்வோரை அச்சம் அடைய செய்கிறது. அதில் ஒருசில நாட்கள் வெறிகொண்டு சிறுவர் சிறுமிகளை துரத்துகிறது. எனவே அம்மாப்பேட்டையில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள தெரு நாய்களை பிடிக்க அம்மாபேட்டை பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெருவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’