அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

பென்னாகரம், நவ.18: பென்னாகரம் அருகே உள்ள சாலை குள்ளாத்திரம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில்இ நாளை (19ம் தேதி) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் காளியம்மன் கோயிலில் இருந்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நேற்று பம்பை மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. நாளை காலை, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள், பங்காளிகள் செய்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை