அம்பத்தூர் மகளிர் ஐடிஐயில் 20ம் தேதி வரை சேர்க்கை: கலெக்டர் தகவல்

 

திருவள்ளூர்: இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வருகின்றற 20ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேர்பவர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இரு செட் சீருடை, மூடுகாலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். அதன்படி தையல் தொழிற்நுட்பம் – 1 வருட பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், கோபா (எஸ்.சி.வி.டி) – 1 வருடம் பயிற்சிக்கு 10 – ம் வகுப்பு தேர்ச்சியும், கோபா (என்.சி.வி.டி) – 1 வருடம் பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டிடப்பட வரைவாளர் – 2 வருட பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், 5 செயலக பயிற்சி (ஆங்கிலம்) 1 வருடபயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பிரிவுகளில் பயிற்சியும் அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு