அம்பத்தூர் பகுதியில் பைக்குகளை குறிவைத்து பெட்ரோல் திருடும் கும்பல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த ஓரகடம் எஸ்.வி.நகர் சிவசண்முகம் தெரு பகுதியில் பெட்ரோல் திருட்டு அரங்கேறிய சம்பவம்  சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இரு சக்கரவாகனங்களை குறிவைத்து பெட்ரோல் திடுவதற்காக 3 வாலிபர்கள் கேன்களுடன் சுற்றினர். ஆள்நடமாட்டம் மிகுந்த செங்குன்றம் சாலையை ஒட்டிய பகுதியில் வீடுகளுக்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோலை தாங்கள் வைத்திருக்கும் டியூப் பொருத்தப்பட்ட வாட்டர் கேனில்  நிரம்பிக்கொண்டு செல்கின்றனர். சிறிது நேரம் கழித்து மற்றொரு வாகனத்திலும் வாட்டர் கேனில் பெட்ரோலை திருடி அவர்கள் வந்த வாகனத்தில் ஊற்றி தப்பிச்செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதே இடத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 2 பைக்குகள் திருடுபோனது. காவல்துறையினர் சரிசர ரோந்து பணியில் ஈடுபடாததே  இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு லிட்டர் பெட்ரோலுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுப்பதா? என பொதுமக்கள் தயக்கம் காட்டுவது பெட்ரோல் திருடர்களுக்கு சாதமாக அமைந்துவிடுகிறது. இருசக்கர வாகனங்களை நூதனமாக திருடும் காலம் மாறி தற்போது பெட்ரோலை திருடி செல்லும் காலம் வந்துவிட்டது என அப்பகுதி மக்கள் நொந்து கொள்கின்றனர்….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது