அம்பத்தூர் உள்பட 7 இடங்களில் பொது கழிப்பறை கட்டும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

அம்பத்தூர்:  தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ2 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் பொது கழிப்பறை கட்டும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சி 7வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச பொது கழிப்பறை கட்டித்தர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், ரூ2 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் பேருந்து நிலையம், மார்க்கெட், அத்திப்பட்டு சின்னகாலனி, கொரட்டூர், மாதனங்குப்பம் உள்ளிட்ட 7 இடங்களில் பொது கழிப்பிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.  இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, கிழக்குப்பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், டிஎஸ்பி ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்