அமைந்தகரை, அரும்பாக்கத்தில் போக்குவரத்து விதி மீறலில் ரூ.22 லட்சம் அபராதம் வசூல்: போக்குவரத்து போலீசார் தகவல்

 

அண்ணாநகர், செப். 10: கடந்த 8 மாதங்களில் அரும்பாக்கம், அமைந்தகரை பகுதியில் போக்குவரத்து விதிமுறை மீறியதாக ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம், அமைந்தகரை பகுதிகளில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார், 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 8 மாதங்களில் மதுபோதையில் ஓட்டுவது, சாலையை ஆக்கிரமித்து நிறுத்திய வாகனங்கள், ஒருவழி பாதையில் செல்வது, அதிவேகமாக ஓட்டுவது போன்ற வழக்குகள் போக்குவரத்து போலீசார் சார்பில பதிவு செய்யப்படுகிறது.

அதன்படி, 3 ஆயிரம் பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 22 லட்சத்து 33 ஆயிரத்து 900 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘‘வாகன ஓட்டிகள் சாலை விதிமுறையை கடைபிடிக்க தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அப்படியிருந்தும் விழிப்புணர்வை கொஞ்சம் கூட மதிக்காமல் செல்கின்றனர். இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே வாகனத்தில் செல்லும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும்’’ என்றார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி