அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு தா.பேட்டை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

தா.பேட்டை: தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1997-98ம் வருடம் பிளஸ்2 பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. தா.பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1997-98ம் ஆண்டு பிளஸ்2 பயின்ற மாணவ, மாணவிகள் ஒன்றாக சந்திக்க திட்டமிட்டனர். இதையடுத்து நண்பர்களுக்கு போன் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் பரிமாறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் 25 வருடங்களுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். அப்போது தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து பேசி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் அய்யாசாமி தலைமையில் ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர்கள் ராமராஜ், ஜோதி, தலைமலை ஆகியோர் முன்னிலையில் பாராட்டு விழாவும், வாழ்த்துரை கூட்டமும் நடைபெற்றது. அப்போது பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுபரிசுகள் வழங்கி கவுரவித்தனர். மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு டிஜிட்டல் பலகை, வகுப்பறைகளுக்கு 36 மின் விசிறிகள் உள்ளிட்ட 1 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் டாக்டர் சிங்காரம், ஆசிரியர் விநாயகமூர்த்தி, மற்றும் மகேஸ், மலையப்பன், சிவா, பிரபாகரன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். கடந்த 25 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவ, மாணவிகள் ஒன்றாக தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்டது அவர்களுடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி