Sunday, October 6, 2024
Home » அமைச்சர் கயல்விழி தலைமையில் தாராபுரத்தில் வனத்துறை அமைச்சருக்கு வரவேற்பு

அமைச்சர் கயல்விழி தலைமையில் தாராபுரத்தில் வனத்துறை அமைச்சருக்கு வரவேற்பு

by Ranjith

 

தாராபுரம்: தாராபுரம் வருகை தந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு, அமைச்சர் கயல்விழி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாராபுரம் அருகே, ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் மதிவேந்தனுக்கு, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். இதன்போது, தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், துணை செயலாளர் தவச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

1 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi