அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்க விசாரணைக்கு விதித்த தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்த உயர் நீதிமன்றம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2002-2006ம் ஆண்டில் இருந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, சொத்துக்களை முடக்கியது.  இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து மனுதாரரை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  எனவே, இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், விசாரணைக்கு அழைத்தால் நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்