அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: அரையிறுதிக்கு தேர்வானார் முதல்நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு அரையிறுதி பிரிவு போட்டிக்கு உலகின் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக், அரினா சபலெங்கா தகுதி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலையில் நடந்த மகளிர் ஒற்றையர் கடைசி காலிறுதி போட்டியில் சர்வதேச மகளிர் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவை எதிர்த்து பலபரிட்சை நடத்தினார். பரபரப்பான போட்டியில் நடப்பாண்டின் பிரெஞ் ஓபன் சாம்பியனான இகா 6-3, 7-6 என்ற நேர் செட்களில்  வென்று, முதன் முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக நடந்த 3-வது காலிறுதி போட்டியில் மகளிர் தர வரிசையில் 22-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து, சர்வதேச தரவரிசையில் உள்ள 6வது இடத்தில் இருக்கக்கூடிய பெலாரசின் அரினா சபலெங்கா மோதினார். இதில் 6-1, 7-6 என்ற நேர் செட்களில் அரினா சபலெங்கா கம்பீரமாக வென்றார். நாளை நடக்கும் அரையிறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொள்கிறார் அரினா சபலெங்கா. ஆடவர் காலிறுதி போட்டி ஒன்றில் உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ்வை எதிர்த்து அமெரிக்காவின் பிரான்செஸ் டியாஃபோ விளையாடினார். இதில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் 7-6,7-6,6-4 என்ற செட் கணக்கில் பிரான்செஸ் வாகை சூடி, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு முதன்முறையாக முன்னேறியுள்ளார்.  …

Related posts

45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்; முதல் ரவுண்டில் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணி வெற்றி: பிரக்யானந்தா, வைஷாலி அசத்தல்

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் சென்னை டெஸ்ட்டில் கோஹ்லிக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி