அமெரிக்க அருங்காட்சியகத்தில் பதவி; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெண் விமானி 17 மணி நேரம் பறந்து சாதனை

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த  இந்திய வம்சாவளி பெண் விமானி, பெங்களூருவுக்கு 17 மணி நேரம் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில்,‘தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த விமான அருங்காட்சியகத்தில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சோயா அகர்வால், விமானியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது, பெருமைமிக்க பதவியாக கருதப்படுகிறது. இவர் தலைமையில் முழுவதும் பெண்களே அடங்கிய விமான குழு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருக்கு 17 மணி நேரம் தொடர்ச்சியாக விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளது. இதன் மொத்த பயண தூரம் 16 ஆயிரம் கிமீ. மோசமான வானிலை, பனி படர்ந்த வட துருவத்தின் மார்க்கமாக பயணித்து, இக்குழு இதை சாதித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவுக்கும் அகர்வால் பெருமை சேர்த்துள்ளார். திறமையான விமானி, உலகளவில் பெண்களின் அதிகாரத்தை முன்னேற்றுவதற்கு அளித்த பங்களிப்பு ஆகியவற்றை பாராட்டி, அருங்காட்சியக விமானி பதவியை அவருக்கு வழங்கி, அமெரிக்க அரசு கவுரவித்து இருக்கிறது….

Related posts

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு