அமெரிக்கா ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் தோல்வியடைந்த செரீனா வில்லியம்ஸ்: கண்ணீர்மல்க ரசிகர்களிடம் பிரியாவிடை..!!

வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் 3வது சுற்றில் ஆஸ்திரேலியா வீராங்கனையிடம் செரீனா வில்லியம்ஸ் தோல்வியுற்றார். இதன் மூலம் அவரது 27 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்தது. மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தர வரிசையில் 46வது இடத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோமலஜனோவிஜை எதிர்கொண்டார். செரீனா முதல் செட்டை கைப்பற்ற, உடனே மீண்டு வந்த அஜ்லா, அடுத்த 2 செட்டுகளையும் தனதாக்கினார். முடிவில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் அஜ்லா வெற்றிபெற்றார். செரீனா தோல்வியை தழுவினாலும் 40 வயதில் இந்த அளவுக்கு போராடியதை பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. அமெரிக்க ஓப்பனில் தன்னுடைய பயணம் முடிவுக்கு வந்ததையடுத்து கண்ணீர்மல்க அவர் விடைபெற்றார். ஒரு குழந்தைக்கு தாயான செரீனாவால் முன்பு போல ஆக்ரோஷமாக விளையாட முடியவில்லை. இதனால் நடப்பு அமெரிக்க ஓபன் தொடருடன் டென்னிஸில் இருந்து விலகி இருப்பது பற்றி யோசிக்க போவதாக அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய மாட்டேன் என்று தற்போது உறுதிபடுத்தி இருப்பதால் செரீனாவின் டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இதையடுத்து உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் ஓய்வுக்கு பிறகான வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  …

Related posts

பெரும்பாலானவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர், ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்: ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு

கான்பூரில் 2வது டெஸ்ட்; ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் பிட்சால் இந்தியாவுக்கு சிக்கல்?

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு