அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒருவர் பாதிப்பு: கொரோனா வைரஸ் பேயாட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு 6 வினாடிக்கும் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுவதாக அதன் மேயர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 442 பேர் பாதித்துள்ளனர். 3 லட்சத்து 57 ஆயிரத்து 620 பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே, நன்றி தெரிவிக்கும் தினம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களால் அமெரிக்காவில் கடந்த டிசம்பரில் இருந்து வைரஸ் தொற்றின் வேகம் மிகவும் தீவிரமாக அதிகரித்துள்ளது. வெயில் காலத்துடன் ஒப்பிடுகையில், குளிர்காலத்தில் 4 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜனவரி ஆரம்பம் முதல், இது இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் தொற்று தீவிரமாக பரவி உள்ளது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் கூட்டம் அலை மோதுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, குறைந்தளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தும்படி சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆம்புலன்சுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிழைப்பதற்கு வாய்ப்புகள் இல்லாத கொரோனா நோயாளிகளை ஆம்புலன்சில் ஏற்றி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. லாஸ்ஏஞ்சலெஸ் மேயர் எரிக் கார்செட்டி கூறுகையில், “இந்த நகரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 3,043 ஆக இருந்த பலி எண்ணிக்கை திங்களன்று இரவு 4,258 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த ஞாயிறு முதல் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 6 வினாடிக்கும் ஒருவர் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவின் பல்வேறு சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் இங்கு அதிகளவில் உள்ள கிளப், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்களில் கூடுவதே அதிகளவில் பரவுவதற்கு காரணம்”, என்றார்.    8 சீன ஆப்களுக்கு தடைவரி விதிப்பால் ஏற்பட்டுள்ள வர்த்தக போர், கொரோனா வைரசை பரப்பி விட்டது, அமெரிக்காவில் உளவு பார்ப்பது போன்ற சீனாவின் செயல்பாடுகளால், அந்நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே, அந்நாட்டின் டிக்டாக் உள்ளிட்ட ஆப்களுக்கு தடை விதித்தார். இந்நிலையில், அந்த நாட்டின் அலிபே, கேம்ஸ்கேனர், க்யூ க்யூ வாலெட், ஷேர் இட், டென்சென்ட் க்யூ க்யூ, விமேட், வி சாட் பே மற்றும் டபிள்யூ.பி.எஸ். ஆபீஸ் ஆகிய 8 சீன செயலிகளுக்கும் நேற்று அவர் தடை விதித்தார்….

Related posts

இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்