Saturday, July 6, 2024
Home » அமீரகத்தை வீழ்த்தியது நெதர்லாந்து

அமீரகத்தை வீழ்த்தியது நெதர்லாந்து

by kannappan

உலக கோப்பை டி20 முதல் சுற்றில் நேற்று நடந்த மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதிய நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஜீலாங் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அமீரகம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்தது. தொடக்க வீரர் முகமது வாசீம் அதிகபட்சமாக 41 ரன் (47 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். அரவிந்த் 18, காஷிப் தாவூத் 15, சிராக் சூரி 12 ரன் எடுத்தனர். நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 3 ஓவரில் 19 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். பிரெட் கிளாஸன் 2, டிம் பிரிங்கிள், ரோலாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து வென்றது. மேக்ஸ் 23, கோலின் ஆக்கர்மேன் 17, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16*, பிரிங்கிள் 15, பாஸ் டி 14, விக்ரம்ஜித் 10 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினர். பாஸ் டி ஆட்ட நாயகன் விருது பெற்றார். நெதர்லாந்து 2 புள்ளிகள் பெற்றது….

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi