அமிர்தி வனச்சரகர், வனவர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் வனஅதிகாரிகள் அதிரடி துப்பாக்கி பறிமுதல் விவகாரத்தில் நடவடிக்கை

வேலூர், பிப்.9: துப்பாக்கி பறிமுதல் தொடர்பாக வேலூர் அமிர்தியில் வனச்சரகர், வனவர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்ைக எடுத்துள்ளனர். வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமிர்தி வன உயிரியல் பூங்கா சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டுவரும் இந்தப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன. அடர்ந்துவளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.

மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாட்களிலும், பூங்கா திறந்திருக்கும். இந்நிலையில் வேலூர் அமிர்தியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வனச்சரகர், வனவர் வனகாப்பாளர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவினர், வனப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது துப்பாக்கியுடன் அங்கிருந்தவர்களை பிடித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல், துப்பாக்கியை பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைத்திருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்த தகவல் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்தியதினர். இதில் வனச்சரகர், வனவர் உட்பட 4 பேர் நடத்திய சோதனையில் சிக்கிய துப்பாக்கியை பறிமுதல் செய்து, வழக்கு பதியாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய 4 ேபரையும் வனத்துறை உயர் அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல், வேலூரில் வனப்பாதுகாப்பு பிரிவு டிரைவர் ஒருவர் சரியாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். எனவே வனப்பாதுகாப்பு டிரைவரும் அதிரடியாக சஸ்பெண்ட் ெசய்யப்பட்டுள்ளார். வனத்துறையில் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு