அமித்ஷாவுடன் சென்று உபி முதல்வர் யோகி வேட்புமனு தாக்கல்

கோரக்பூர்: உத்தரப் பிரதேசத்தில் வரும் 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜ.வின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தே போட்டியிடுகிறார். முதல் முறையாக இப்போதுதான் சட்டமன்ற தேர்தலில் யோகி போட்டியிடுகிறார். நேற்று அவர் தொண்டர்கள் படை சூழ ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சென்றார். மனுத் தாக்கலுக்கு பிறகு கோரக்பூரில் பேசிய அமித்ஷா, ‘‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. உபி.யில் முதல்வர் யோகி தலைமையிலான அரசு அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் ஏழைகளுக்கு சென்றடைவதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே, எதிர்க்கட்சி கூட்டணி பாஜ.விடம் தோற்றுள்ளது. அவை மீண்டும் தோற்கடிக்கப்படும்,’’ என்றார்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…