அனைவருக்கும் 100 நாள் வேலை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் முற்றுகை

 

திருத்துறைப்பூண்டி, ஆக. 9: திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிராம ஊராட்சிகளில் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் வார்டுகளில் சுழற்சி முறையில் நடைபெறும் பெயரளவில் வேலை கொடுப்பதை நிறுத்தி ஊராட்சிகளில் பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.

வேலை செய்தவர்களுக்கு கூலி வழங்க மறுக்கும் நிர்வாகம் உடனே கூலி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசுவாமி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தகவல் அறிந்த ஒன்றிய ஆணையர் தெய்வ நாயகி, மேலாளர் வசந்தன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 மணி நேரத்துக்கு பிறகு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி