அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (பிஎப்.7) வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த வைரஸ் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நுழைந்து விட்டது. இந்தியாவிலும் 3 பேர் பிஎப்.7 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா, மேலும் பரவாமல் தடுக்க ஒன்றிய அரசு தொடர் நடவடிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நிபுணர்களுடன் நடத்தினார். பிரதமர் மோடி நேற்று கொரோனா பரவல் நிலைமை குறித்து டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்; அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். பண்டிகை காலங்களில், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை தேவை. முன்கள பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், உபகரணங்களை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உருமாறிய கொரோனா பரவலை தடுப்பதில் மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். முன்கள பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். …

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை