அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களது தகவல்களை தயக்கமின்றி கணக்கெடுப்பில் காட்ட அறிவுறுத்தல்

 

பெரம்பலூர், பிப்.2: பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவுகள் நடைபெற்று வருவதால், கணக்கெடுப்பில் தங்களது தகவல்களை முழுமையாக வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மாற்றுத் திறனா ளிகள் நலத்துறையால், உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக் கான சமூக தரவுகள் பதிவு- செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை இரண்டு கட்டங்களாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் சமூக தரவுகள் பதிவு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மீதமுள்ள 33 மாவட்டங்களில் நவம்பர் 29ம் தேதி முதல் சமூக தரவுகள் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரம்பலுார் மாவட்டத்தில் 11,937 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்களும், தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப் பணியாளர்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 9,969 மாற்றுத்திறனாளிகளிடம் கணக்கெடுப்பு நடைபெற்று உள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் தகவல்களை இந்தக் கணக் கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு