அனைத்து மாணவர்களும் விண்வெளி பற்றி தெரிந்திருக்க வேண்டும் மூத்த விஞ்ஞானி வேண்டுகோள்

நாகர்கோவில், செப்.17: நாகர்கோவில், புதுக்கிராமம், ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் விண்வெளி மன்றம் தொடக்க விழா இன்டர்நேஷனல் பள்ளி தலைவர் டாக்டர் அருள்கண்ணன் தலைமையில், துணை தலைவர் அருள்ஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இன்டர்நேஷனல் பள்ளி டீன் டாக்டர் எர்க் மில்லர், இயக்குநர் சாந்தி, மருத்துவ குழு டீன் டாக்டர் அருணாசலம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். பள்ளி முதல்வர் ஜெயா சங்கர் அறிமுக உரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்ரோ மூத்த விஞ்ஞானி பால்வண்ணன் கலந்துகொண்டு ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியின் விண்வெளி மன்றத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: அனைத்து மாணவர்களும் விண்வெளி மற்றும் விண்வெளி ஆய்வு மையத்தை பற்றி தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். விண்வெளி தொழில்நுட்பத்தால் நாடு முன்னேற்றம் அடையும். எனவே மாணவர்கள் விண்வெளி தொடர்பான படிப்பை படிப்பதின் மூலம் சிறந்த விஞ்ஞானி ஆகி நாட்டிற்கு சேவையாற்றலாம். தற்போது இருந்தே இளம் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி கொடுத்து வருவதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒழுக்கம், கடின உழைப்பு, அதிகமாக புத்தகங்கள் வாசித்தல் இவை அனைத்தும் சிறந்த குறிக்கோளோடு முயன்றால் நாம் நினைத்த விஷயத்தில் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். முன்னதாக பள்ளி ஆசிரியை ரேணுகா தேவி வரவேற்றார். பள்ளி ஆசிரியை சகாய அனீஷ் நன்றி கூறினார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்