அனைத்து மருந்தகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தல்

திண்டுக்கல், அக். 2: திண்டுக்கல் மாவட்டத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மயக்கவியல் மருந்துகள் (H, H1, Xல்) விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்ட விதிகள்படி, உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மயக்கவியல் மருந்துகள் (H, H1, Xல்):விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும், இன்றைய நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்டறியப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்