அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

திருவள்ளூர்: மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு கொள்கைகளை மாற்றுதிறனாளிகள் உரிமை சட்டம், 2016ன் படி உருவாக்கவேண்டும். அவர்களுக்கான பணியிடங்களை கண்டறிந்து குறைந்தது 5 சதவீதம் பணி வாய்ப்பு மற்றும் நியமனம் வழங்கவேண்டும். 20 பேருக்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள கூகுள் சீட் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அதை இரு நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வின் போது மாற்றுத்திறனாளிகள் நிறுவனங்களை அணுகுவதற்கான சாய்வுதளம், வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஆய்வறிக்கையை பூர்த்தி செய்து அந்த நிறுவனத்திற்கு வழங்கும் ஆய்வு உத்திரவில் இதை தெரியப்படுத்த வேண்டும். அதிக மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை கண்டறிந்து, அவர்களை பணியமர்த்தி உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சுதந்திர தினவிழாவில் முதல்வர் மற்றும் கலெக்டரால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  …

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்