அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், ஆக.15: மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே பாஜ ஒன்றிய அரசு இயற்றிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, தொமுச மற்றும் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், திமுக நகர செயலாளர் குமார் தலைமையில் நேற்று காலை ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேரவை செயலாளர் பொண்ணுராம், காஞ்சி மண்டல செயலாளர் ரவி, துணை செயலாளர் தனசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு, ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தொமுச மற்றும் சிஐடியு நிர்வாகிகள் சசிகுமார், பகத்சிங்தாஸ், பொன்னுசாமி, மதுராந்தகம் பணிமனை செயலாளர் ராஜேந்திரன், மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், கல்பாக்கம் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகம் தொமுச பணிமனை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி