அனுமதியற்ற மனைப்பிரிவு மனை வரன்முறைப்படுத்த 29ம் தேதி வரை காலநீட்டிப்பு

 

திருவாரூர், பிப். 9: திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்திட வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்குட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறை மூலம் கால நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன் முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி