அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடத்திற்கு இசைவு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு

விருதுநகர், ஜூன் 22: விருதுநகர் மாவட்ட கலெக்டர் ெஜயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில், நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011 ஜனவரி 1க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை மூலம் 2018 ஜூன் 14ல் வெளியிடப்பட்டன.

2021 மார்ச் 22 முதல் ஏப்ரல் 4 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க, மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்கப்பட்டது. தற்பொழுது இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக வருகிற ஜூன் 30 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பிக்காதவர்கள், விரைந்து உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இது இறுதியாக வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை