அனல்மின் நிலைய குடியிருப்பில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

மேட்டூர், ஜூன் 22:மேட்டூர் தூக்கணாம்பட்டியில் அனல் மின்நிலைய குடியிருப்பு உள்ளது. இங்கு அனல் மின் நிலைய பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். நேற்று முன்தினம், மழை பெய்த நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் 12 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட அனல் மின் நிலைய ஊழியர்கள், மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அங்கு வந்த வனத்துறையினர் பாம்புபிடி வீரர் மூலம் லாவகமாக மலைப்பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டு கட்டினர். இதையடுத்து, வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச்சென்ற மலைபாம்பை, நேற்று பாலாறு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு