அத்திக்குன்னா பகுதியில் பூமியில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் ஆய்வு

 

பந்தலூர், செப்.22: பந்தலூர் அருகே அத்திக்குன்னா தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் பூமியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை அரசு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பந்தலூர் தாலுகா அத்திக்குன்னா தனியார் தேயிலைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பூமியில் திடீரென சுமார் 8 அடி அகலம், 20 அடி அகழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியை நேற்று கூடலூர் கோட்டாட்சியர் முகமதுகுதரதுல்லா மற்றும் புவி மற்றும் சுரங்கத்துறை உதவி புவியலாளர் சரவணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பூபாலன், நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர்,தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஏற்கனவே இப்பகுதியில் குடிநீர் கிணறு இருந்துள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிக்கு குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படிப்பு பயிற்சி பட்டறை; செங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மாவட்ட கால்பந்து போட்டி கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்

கருங்குழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு சூரிய சக்தி மின் விளக்குகள்