அதிவேகமாக பைக் ஓட்டியவர்களுக்கு அபராதம்

 

ஜெயங்கொண்டம், பிப்.23: அரியலூர் மாவட்ட எஸ்.பி செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் ஆலோசனையின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த 4 மோட்டார் சைக்கிள்களை பிடித்து பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 4 மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கும் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.5000 வரை என ரூ 27 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டினால் அடிக்கடி இது போன்று வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன் அபராதங்கள் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை