அதிர்ச்சி தகவல் வெளியானது: கிரெடிட் கார்டு தகவல் திருட்டு: 10 கோடி பேருக்கு ஆபத்து

புதுடெல்லி: பணபரிவர்த்தனை தளத்தில் இருந்து சுமார் 10 கோடி பேரின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஆன்லைன் திருட்டு கும்பல் இந்த தகவல்களை பெற்று பலரது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமேசான், மேக் மை டிரிப், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பணப்பரிவர்த்தனை தளமாக ஜஸ்பே செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்நிலையில், ஜஸ்பே வழியாக 10 கோடி பேரின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ராஜசேகர் ராஜஹரியா தகவல் வெளியிட்டுள்ளார். பெங்களூரை சேர்ந்த ஜஸ்பே மூலம் இத்தகவல்கள் திருடப்பட்டு அது இணையத்தின் இருண்ட பக்கங்களில் ஹேக்கர்கள் விற்பனைக்கு வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். கடந்த ஆகஸ்ட்டில் சில விவரங்கள் பாதுகாப்பு குறைபாட்டுக்கு ஆளாகியிருக்கலாம் என ஜஸ்பே நிறுவனமும் கூறியுள்ளது. 2017ம் ஆண்டு மார்ச் முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள் திருடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவரங்களை கிரெடிட்கார்டு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை ஆன்லைன் பயன்படுத்தும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை