அதிரடியாக சரிந்தது நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.39,280க்கு விற்பனை..இல்லத்தரசிகள் குதூகலம்..!!

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.40,000 கீழ் வந்தது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகவும் அதிகம் என்றே கூறலாம். தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியாக கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சவரன் 40 ஆயிரத்தை எட்டி இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது. தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல்  விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக சரிவை கண்டிருப்பது இல்லத்தரசிகளை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 110 ரூபாய் குறைந்து ரூ.4,910க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.880 குறைந்து ரூ.39,280க்கு விற்பனையாகிறது. சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,309 எனவும் ஒரு சவரன் ரூ.42,472 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 260 காசுகள் குறைந்து ரூ.74.10 எனவும், ஒரு கிலோ விலை ரூ.74,100 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை : வங்கி, எண்ணெய் நிறுவன பங்குகள் மதிப்பு சரிவு.. முதலீட்டார்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு