அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சொத்து குவிப்பு வலுவான ஆதாரங்கள் சிக்கியது: லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடி இறுகுகிறது

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து குவித்தது தொடர்பாக வலுவான ஆதாரங்கள் சிக்கியதால் லஞ்ச ஒழிப்பு போலீசின் பிடி இறுகுகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் 58 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் லஞ்ச ஒழிப்பு துறை 11.11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, கணக்கில் வராத 84 லட்ச ரூபாய், வங்கி லாக்கர், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், 34 லட்ச ரூபாய் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி முதலீடு கண்டறியப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ‘‘எஸ்.பி. வேலுமணி, அவரது அண்ணன் அன்பரசன், அவரது குடும்பத்தினர் செய்த செலவு, அவர்களுக்கு வந்த பணம், இவர்களை சார்ந்தவர்களின் பெயரில் பதிவான சொத்துக்கள் எப்படி வாங்கப்பட்டது? என அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கிரிப்டோ கரன்சி இல்லை என்கிறார்கள். ஆனால் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. வலுவான ஆதாரங்கள் உள்ளதால் இவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தப்ப முடியாது. இவர்கள் முதலீடு செய்தது, சொத்து வாங்கியது, வெளிநாட்டுக்கு சென்றது, அதற்கான பயண செலவு, நகைக்கடைகளில் செய்த வியாபாரம் போன்றவற்றின் வரவு, செலவு ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது’’ என்றனர்….

Related posts

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது