அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷாவிடம்தான் கேட்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து, அமித்ஷாவிடம் தான் கேட்க வேண்டுமென அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கான துவக்க விழா நேற்று மதுரை, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இலவச சைக்கிள்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவோர் 2 கோடியே 7 லட்சமாக உயர்ந்து விட்டது. முதல்வர் சர்க்கரை கார்டுகளை மாற்றக்கூறியதால் ஒரு லட்சம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அத்தனை கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். சரியாக பொருட்கள் கொடுக்கப்படுகிறதா, பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வேன். ரேஷன் கடைகளில் டோக்கன் கொண்டு வந்தால்தான் பரிசு தொகுப்பு கொடுப்போம் என்ற நிலை இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னையில் ஒரு வார இதழ் விழாவிற்குத்தான் வருகிறார். அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவருடைய நிகழ்ச்சி நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும். அவர் வந்த பிறகு தான் வேறு என்ன நிகழ்வு என தெரியும்.நிரந்தரமான நடிகராக கமல்ஹாசன் நமக்கு தேவை. அவர் அரசியலில் பலிகடா ஆக வேண்டாம். அவர் தேர்தல் வரை பேசிக் கொண்டிருப்பார். தேர்தல் களத்தை அவர் ஷூட்டிங் ஸ்பாட் போல நினைக்கிறார். அவரைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட்டாலே போதுமானது. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில், சூழலுக்கேற்ப முதல்வர் கலந்து கொள்வது குறித்து முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார். …

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்