அதிமுக பிரமுகரை வெட்டிய 3 வாலிபர்கள் சிக்கினர்

ஆவடி: அதிமுக பிரமுகரை கத்தியால் வெட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி யோடிய 3 பேரை தேடுகின்றனர். அயப்பாக்கம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் எம்.எம்.மூர்த்தி(48). வில்லிவாக்கம் ஒன்றிய அதிமுக துணைச் செயலாளர். நேற்று முன்தினம்  வீட்டிலிருந்து வெளியே நடந்து வந்தபோது, அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு வெட்டி கொல்ல முயன்றனர். இதனையடுத்து, தன்னை தற்காத்துக்கொள்ள மூர்த்தி, ஒரு வாலிபரிடம் இருந்து கத்தியை பிடுங்கி அவரை வெட்டியுள்ளார். இச்சம்பவத்தில் மூர்த்தி, வாலிபர் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனை பார்த்து சக வாலிபர்கள் அங்கிருந்து தப்பினர். அக்கம்பக்கத்தினர் மூர்த்தியை  மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், படுகாயமடைந்த வாலிபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கிருந்து, அந்த வாலிபரும் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.விசாரணையில், மூர்த்தியை வெட்டியது அயப்பாக்கம் தெருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபாகரன்(25) என்பது தெரியவந்தது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனின் கூட்டாளிகளான அயப்பாக்கம் அன்னை தெரசா நகரை சேர்ந்த விஜயசேகர்(23), அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வானவில் தெருவை சேர்ந்த முத்து(23), அயப்பாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜ்(19) ஆகியோரை நேற்று  கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தப்பிசென்ற பிரபாகரன் உட்பட அவரது கூட்டாளிகள் பவித்திரன்(23), பிரவீன்(21) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைது செய்த வாலிபர்களிடம் மூர்த்தியை எதற்காக வெட்டினார்கள், யார் தூண்டுதலின்பேரில் கொலை முயற்சி நடந்தது என விசாரிக்கின்றனர்….

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு