அதிமுக பல போராட்டங்கள், அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளது: சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி

சென்னை: சென்னையில் திமுக பிரமுகர் நரேஷை அரைநிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேல் மேலும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதிலும் கைதாகி உள்ளார். இதையடுத்து, புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 9.15 மணியளவில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்திக்க புழல் சிறைக்கு வந்தார். அவருடன் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகரன், மாதவரம் மூர்த்தி, அம்பத்தூர் அலெக்ஸாண்டர் உள்பட பலர் உடனிருந்தனர். இதில், ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய 3 பேருக்கு மட்டும் சிறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 3 பேரும் சிறைக்குள் சென்று ஜெயக்குமாரை சிறையில் சந்தித்தனர்.பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில்: தமிழகத்தில் பல்வேறு வகையில் அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது. இதற்காக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதிமுக 50 ஆண்டு காலத்தில் பல போராட்டங்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. எந்த அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம். அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அரசு அச்சுறுத்தி வருகிறது. ஜெயக்குமார் நலமாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார் என்றார்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…