அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி

 

வேலூர், மே 30: எடப்பாடி பழனிசாமி பதவி, சுயநல வெறி, பணத்திமிர், அதிகார திமிரில் ஆட்டம் போடுகிறார். அதிமுக ெதாண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் என்று வேலூரில் டிவிவி தினகரன் கூறினார். வேலூரில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிவிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த முறை தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் மோடி கேதர்நாத் சென்றார். தமிழகம் வருவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது இல்லை. விவேகானந்தர் இல்லத்தில் பிரதமர் தவம் இருப்பதால் வாக்காளர்களை எந்த விதத்தில் பாதிக்கும் என்று தெரியவில்லை. மோடியைக் கண்டு பயப்படுகிறார்கள். மோடியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் எதிராக பேசுவதை, வேலையாக வைத்திருக்கிறார்கள்.

பாஜக கூட்டணியில் இருந்தபோது ஜெயகுமாருக்கு தெரியவில்லையா. இவர்கள் வெளியே வந்ததும் அவர்களுக்கு மதம் பிடித்து விட்டது. இந்துத்துவா என்பது ஒரு வாழ்வியல் முறை என்று அண்ணாமலை தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. எல்லா மதங்களையும் அரவணைத்து செல்வதுதான் இந்துத்துவா. அதேபோல் 1984ம் ஆண்டு ஜெயலலிதா எம்பியாக இருந்தபோது காஷ்மீருக்கு 370வது பிரிவு வேண்டாம் என்று தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக இருந்தார். அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமலும், மற்றும் அணைகளையும் கட்டி வருகின்றனர்.

இதனை இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க 3வது முறையாக பிரதமராக மோடி வந்தால் தான் தீர்க்க முடியும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி பதவி, சுயநல வெறி, பணத்திமிர், அதிகார திமிரால் ஆட்டம் போடுகிறார். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை