அதிமுக சார்ந்த நடவடிக்கைகளுக்கு தம்மிடம் ஆலோசிக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் 2வது முறையாக கடிதம்..!

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக சார்ந்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் அப்பாவு தம்மை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு 2வது முறையாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதிமுக சம்மந்தப்பட்ட சட்டமன்ற குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருந்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை புதிய துணை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் ஏற்கனவே கடிதம் கொடுத்தனர். இரு தரப்பு கடிதங்களும் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதனிடையே சட்டப்பேரவை கூட்டம் வரும் 17ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதிமுக தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. …

Related posts

சொல்லிட்டாங்க…

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்