அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு உகந்தது இல்லை என தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உகந்தது இல்லை என்று தள்ளுபடி செய்தது நீதிமன்றம். அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. பன்னீர்செல்வம், பழனிச்சாமி தேர்வை ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது என்று அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். ஜெயச்சந்திரன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டில் ஓசூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் அளித்த மனுவில் தேர்தல் அறிவிப்பு மிக குறுகிய கால இடைவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 21 நாட்களாவது இடைவெளி விட வேண்டும். வேட்புமனுவுக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை. வாக்காளர் பட்டியலும் வெளியிடவில்லை. சுமார் 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியினர் வாக்களிக்க ஒரு நாள் போதாது. மொத்தத்தில் இந்த தேர்தல் அறிவிப்பு என்பதே கபடநாடகமாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளராகவும், இணைஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யவே, இது போல கட்சி நிர்வாகிகள் செயல்படுகின்றனர். எனவே இந்தத் தேர்தலில் தடை விதிக்க வேண்டும். இந்த தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற நிர்வாகிகள் பதவிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த வாரம் உத்தரவிட்டனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்வானதை எதிர்த்து தொடரப்பட்ட ஓசூர் ஜெயச்சந்திரன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை