அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

கடையநல்லூர், செப்.5: கடையநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இடைகாலில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை அட்டையை அதிமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவஆனந்த், மாவட்ட இணை செயலாளர் சண்முகப்ரியா, அண்ணா தொழிற்சங்கம் கந்தசாமி பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைத்தலைவர் கோபிநாத், ஒன்றிய துணை செயலாளர் களஞ்சியம், மாவட்ட பிரதிநிதி திரவியம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் இடைகால் செல்லப்பா, ஜெ.பேரவை துணைத்தலைவர் அரிராம், கிளை செயலாளர் ரமேஷ், மூத்த நிர்வாகிகள் வேல்சாமிபாண்டியன், சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி