அதிமுக உட்கட்சி தேர்தல் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் இருதரப்பினர் திடீர் மோதல்: நாற்காலிகளை வீசி தாக்குதல்

கள்ளக்குறிச்சி: அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறவேண்டி கட்சி தலைமை அறிவித்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் இளங்கோவன், வேல்முருகன் ஆகியோரும் தேர்தல் பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு கேட்டுள்ளனர். அப்போது மனு வழங்குவதில் காலதாமதம் ஏற்படவே அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது.இதையடுத்து ஒன்றிய செயலாளர் ராஜசேகர் ஆதரவாளர்களுக்கும், இளங்கோவன் தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தரப்பினருக்கும், நிர்வாகி வேல்முருகன் தரப்பினருக்கும் தகராறு ஏற்படவே இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளை திடீரென எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தால் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

பாஜகவுக்கு பாடம் புகட்ட ‘இந்தியா’ கூட்டணி புது வியூகம்; துணை சபாநாயகர் வேட்பாளர் அவதேஷ் பிரசாத்?: கூட்டத் தொடர் முடிய 3 நாட்களே உள்ளதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை