அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணாக்கப்பட்டது சரியான திட்டமிடலால் சேமிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி கூடுதலாக 1.25 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணாக்கப்பட்டது என்றும், தற்போது 1,25 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக போடப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா புனர்வாழ்வு கையேட்டை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மேலும் டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் வழங்கிய 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரண கருவியை அமைச்சர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கிங்ஸ் மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமி மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது கிங்ஸ் மருத்துவமனையில் 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் கூட கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கோவிட் பிந்தைய நலவாழ்வு சிகிச்சை மையம் அனைத்து மாவட்டத்திலும் தொடங்கப்படும். 3வது அலை வந்தால் சிறப்பாக எதிர் கொள்ள அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.10.50 கோடி செலவில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை திருவாரூரில் முதல்வர் நாளை (இன்று) தொடங்கி வைக்க உள்ளார். கடந்த ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணாக்கப்பட்டது. ஒரு வயலில் 10 முதல் 12 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணக்கப்பட்டது. ஆனால் தற்போது மிக கவனமாக, திட்டமிட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 1.25 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக போடப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து சில அரசியல் கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். ஒருநாளைக்கு மூன்று முறை அறிக்கை கொடுக்கிறோம். இதற்கு மேலும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்றால் வெள்ளை பேப்பரில் எழுதிகொடுத்துவிடுகிறோம்.  இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட நாளிதழ், ஊடக செய்தியாளர்களுக்கான கொரோனோ தடுப்பூசி முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 3,300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை குறித்து வரும் 13ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகே முடிவெடுக்கப்படும். புதிதாக தொடங்கவுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஒன்றிய அமைச்சரிடம் பேசிய பிறகு மாணவர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.இவ்வாறு கூறினார்.* அசாம் கோதுமையும்… தமிழ்நாடு போராட்டமும்அமைச்சர் கூறுகையில், அசாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் 20 கிலோ கோதுமை தருகிறார்கள். பாகிஸ்தானில் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துங்கள் என போராட்டம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தற்போது வரையிலும் மொத்தமாக 1,57,76,550 வந்துள்ளது. 63,460 தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றார்.* நாளை டெல்லி பயணம்அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தடுப்பூசிகள் வருவதற்கு ஏற்ப மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டங்களுக்கு பிரித்து உடனடியாக அனுப்பப்பட்டு வருகிறது. அட்டவணைப்படி 11ம் தேதிதான் தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கும் தடுப்பூசி அளவை 75% லிருந்து 90% உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பிரதமரிடம் தமிழக முதல்வர் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். செங்கல்பட்டு தடுப்பூசி மையம் முழுமையாக செயல்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது. குன்னூரில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு உபகரணங்களை வழங்கினால் மாதத்திற்கு 1 கோடி தடுப்பூசி தயாரிப்பாதற்காக தயாராக உள்ளது. நாளை டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து தடுப்பூசிகள், தடுப்பூசி மையம் மற்றும் எய்ம்ஸ் தொடர்பாக கோரிக்கை விடுக்கவுள்ளோம்’’ என்றார்….

Related posts

சொல்லிட்டாங்க…

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஆலோசனை !!