அதிமுக அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நடந்த மோதல்; சிபிஐ-க்கு மாற்றுமாறு தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். தரப்பு

சென்னை: அதிமுக அலுவலகத்துக்கு உலையும், வெளியேயும் நடந்த மோதல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுமாறு தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர், ராயப்பேட்டை காவல் நிலை ஆய்வாளர் ஆகியோர்க்கு ஈ.பி.எஸ். தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமையலகம் முன் நடந்த தாக்குதலில் தங்கள் தரப்பு ஆதரவாளர்களை மட்டுமே காவல்துறை கைது செய்துருப்பதாகவும், ஓ.பி.எஸ். தரப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் முக்கிய ஆவணங்களை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சி.வி. சண்முகம் விமசித்துள்ளார். எனவே சிபிஐ அல்லது அது போன்ற சுகத்திரமாக செயல்படக்கூடிய அமைப்புக்கு வழக்குகளை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் சி.வி. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை