அதிமுகவுக்கு ஆதரவு மட்டுமே சென்னை மாநகராட்சி தேர்தலில் தமாகா போட்டியிடவில்லை: ஜி.கே.வாசன் அதிரடி முடிவு

சென்னை: இட பங்கீட்டில் உரிய வார்டுகளை ஒதுக்காததால் சென்னை மாநகராட்சி தேர்தலில் மட்டும் தமாகா போட்டியிடவில்லை என்றும், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தற்போது அதிமுக கூட்டணியில் தமாகா, புரட்சி பாரதம், சமூக சமத்துவ படை உள்ளிட்ட கட்சிகளே இடம்பெற்றுள்ளன. ஆனாலும், இந்த கட்சிகளுக்கு ஒரு சில வார்டுகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது. இதனால் அக்கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமாகாவுக்கு எதிர்பார்த்த வார்டுகளை ஒதுக்காதது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பாஜ, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியதால் தமாகாவுக்கு கூடுதல் வார்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் குறைந்த அளவிலான வார்டுகளை மட்டுமே அதிமுக தலைமை ஒதுக்கியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 4 வார்டுகள் வரை தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஒரு வார்டு மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்தது. இதனால் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. எனவே, அந்த வார்டையும் தமாகா ஏற்றுக் கொள்ளாமல் கூடுதல் வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. ஆனாலும் கூடுதல் இடங்களை ஒதுக்க அதிமுக முன்வரவில்லை. எனவே, தற்போது சென்னை மாநகராட்சி தேர்தலில் தமாகா போட்டியிடவில்லை என்றும், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி வார்டுகளில் மட்டும் தமாகா போட்டியிடவில்லை. கூட்டணி கட்சியான அதிமுகவின் முழு வெற்றிக்கு தமாகா ஆதரவு கொடுக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளில், 138 நகராட்சிகளில், 490 பேருராட்சிகளில் போட்டியிடும் அதிமுக, தமாகா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிபெற தமாகா பாடுபடும்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…