அதிமுகவின் தற்போதைய நிலையை கண்டு வருந்துகிறேன்: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி

நெல்லை: அதிமுகவின் தற்போதைய நிலையை கண்டு வருந்துகிறேன் என்று  பா.ஜ. எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். நெல்லையில் நேற்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அளித்த  பேட்டி: எம்ஜிஆர்  உருவாக்கிய அதிமுக இயக்கம் நிலையாக இருக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க  வேண்டும் என்பதுதான் பா.ஜ.வின் விருப்பம். அதிமுக உள்கட்சி விவகாரங்களில்  பா.ஜ. தலையிடாது.  அதிமுகவின் தற்போதைய நிலையை கண்டு மனம் வருந்துகிறேன். சட்டம் ஒழுங்கு சீர்கெடும் சம்பவங்களால் அதன்  தலைமை அலுவலகத்தை சீல் வைக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்க கூடாது. அதிமுகவிலிருந்து பா.ஜ.விற்கு நான்  யாரையும் அழைக்கவில்லை. நான் அழைத்திருந்தால் அதிகமானவர்கள் பா.ஜ.வில்  இணைந்திருப்பார்கள். ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்திருப்பது எதிர் வரும் காலங்களில்  கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்வதற்கு நல்வாய்ப்பாக அமையும். அக்கட்சியின் வருங்காலம் வளமையாக  அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

Related posts

ரேஷன் பொருள் விநியோகத்தை சீர்செய்ய எடப்பாடி வலியுறுத்தல்

3 சட்டங்களை வாபஸ் கோரி 8ம் தேதி கோர்ட் புறக்கணிப்பு: சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்