அதிக லோடு ஏற்றிச் செல்லும் வைக்கோல் லாரிகளால் விபத்து அபாயம்

கம்பம்: கம்பம் பகுதியில் அதிக வைக்கோல் லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களிலிருந்து, அண்டை மாநிலமான கேரளாவுக்கு லாரிகளில் பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர். இந்நிலையில், தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. இதனால், கேரளாவுக்கு வைக்கோல் லோடு ஏற்றி செல்கின்றனர். இவ்வாறு செல்லும் லாரிகளில் அதிகளவு வைக்கோல் பாரம் ஏற்றுவதால், லாரிகள் கவிழ்ந்து விபத்து அபாயம் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. தற்சமயம் கோடை வெயில் கொளுத்துவதால் வைக்கோல் லாரிகளில் மின்வயர் உரசி திடீரென தீப்பற்றும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது மேலும் இரு வழக்கு