அதிக பாரம் ஏற்றிச்சென்ற 6 லாரிகளுக்கு அபராதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர பகுதியில் சவுடு மண் ஏற்றப்பட்ட சரக்கு வாகனங்கள் தார் பாலின் போட்டு மூடப்படாமலும் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாகவும் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் வட்டார போக்குவத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் மற்றும் போககுவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சுமார் 40 சரக்கு லாரிகளை ஆய்வு செய்தனர். இதில் அதிக சுமை, அனுமதிக்கு புறம்பாக சரக்கு ஏற்றும் பகுதியை உருமாற்றம் செய்யப்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு ஏற்றும் பின் பகுதியில் தார் பாலின் கொண்டு மூடப்படாத 6 சரக்கு டிப்பர் லாரிகளை சிறைபிடித்து வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டது. அதன் பின் வாகன உரிமையாளர்கள் நேரில் வந்து சரக்கு ஏற்றும் பகுதியில் அதிகப்படியாக வைத்துள்ள ரீப்பரை உடனடியாக எடுத்து விடுவதாகவும், பின் பகுதியில் தார் பாலின் கொண்டு மூடி வாகனத்தை இயக்குவதகவும் உறுதி அளித்தப்பின் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. …

Related posts

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: ம.நீ.ம. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்!