அதிகாலையில் அடுத்தடுத்து அதிர்வு டெல்லி, நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு: வீடுகள் இடிந்து 6 பேர் பலி

புதுடெல்லி: டெல்லி, நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் வீடுகள் இடிந்து விழுந்து 6 பேர் பலியாகினர். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 1.57 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள், சத்தம் கேட்டு அலறி அடித்து வீடுகளில் இருந்து வெளியேறினர். உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகருக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கிமீ  தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்தளவு நிலநடுக்கம்  ஏற்பட்டு வருகிறது. உத்தரகாண்ட்-நேபாளம் பகுதியிலும் அதிகாலையில் 2 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. இவை முறையே 3.6, 4.3 புள்ளிகளாக இருந்தது. நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தில் அதிகாலை 2.12 மணியளவில் 6.6 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதற்கு முன்பாக 2 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நேற்று  முன்தினம் இரவு 9.07 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலும், இரவு 9.56 மணிக்கு 4.1  ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஒரு போலீஸ் சோதனை சாவடி, 8 வீடுகள் இடிந்தன. இதில் 6 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்த 5 பேர்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும், தலைநகர் டெல்லி, நொய்டா, காசியாபாத், குர்கிராம், உத்தர பிரதேசத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் 3 முதல் 10 வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போது வீடுகள் அதிர்ந்தது, பொருட்கள் உருண்டு ஓடியது, கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். உத்தரப் பிரதேச எல்லையில் 50- 70 வினாடிகள் வீடுகள் குலுங்கின. உத்தரகாண்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்க பீதியால் விடியவிடிய தூக்கத்தை தொலைத்து சாலையிலேயே மக்கள் இருந்தனர். டெல்லி, உபி., உத்தரகாண்ட், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்கள் குறித்து விவரங்கள் வெளியிடபடவில்லை.   …

Related posts

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்