அதிகார துஷ்பிரயோகத்திலும், ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு : தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!!

சென்னை : கிருஷ்ணகிரி மற்றும் வேதாரண்யம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின்  வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கமாறு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.இதேபோல, வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியனின் வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேதரத்தினம் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில், இரு தேர்தல் வழக்குகளும் நீதிபதி பாரதிதாசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகார துஷ்பிரயோகத்திலும், ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டதாகவும் எனவே அவர்கள் போட்டியிட்ட 2 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக செப்டம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இரு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு